top of page

COLOMBOSCOPE 2021 / Festival Concept

மொழி ஒரு புலம்பெயரி

Curated by Anushka Rajendran • With Artistic Director Natasha Ginwala

சிலிநாட்டைச் சேர்ந்த கலைஞரும், கவிஞருமாகிய சிசிலியா விகுயூனாவின் (Cecilia Vicuña) 'மொழி ஒரு புலம்பெயரி' எனத்தலைப்பிடப்பட்ட கொள்கைப் பிரகடனக் கவிதையிலிருந்து கொழும்பு ஸ்கோப்பின் (Colomboscope) ஏழாவது தொகுப்பு பயணஞ் செய்கிறது.. 'சொற்கள் ஒரு  மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கும், ஒரு கலாசாரத்திலிருந்து இன்னொரு கலாசாரத்திற்கும், வாயிலிருந்து வாய்க்கும் செல்கின்றது. எமது உடல்கள் புலம்பெயரிகள்; கலங்களும், பக்ரீறியாக்களும் கூட புலம்பெயரிகள்தான். விண்மீன் மண்டலங்கள் கூடப் புலம் பெயருகின்றன.' என அவர் எழுதுகிறார். கலைஞர்கள், இன்றியமையாத பயணிகளாகவும் எமது காலகட்டத்தின் கதைசொல்லிகளாகவும், இயற்றுவதிலும். அர்த்தங்களை அவிழ்ப்பதிலும் ஆற்றுகையிலும் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான வேளைகளில், இனமுரண்பாட்டுக் கதையாடல்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் மூழ்கிப்போன வரலாறுகள் ஆகியவற்றுக்கிடையில் பாலமாகின்ற மொழிகளைக் கண்டுபிடிக்கும் வேளையில் ஆழ்ந்த இழப்புக்களிலிருந்தும் மௌனத்திலிருந்தும், அழிப்புக்களிலிருந்தும் பௌதீக ரீதியான வெளிப்பாடுகளைப் பெறுவதன் மூலம் உறவுநிலைகளை அவர்கள் திருத்தியமைக்கின்றனர்.

 

இந்தக் கலைப்பெருவிழா இலங்கை, தெற்காசியா மற்றும் பல்வேறுபட்ட சர்வதேச சூழமைவுகளிலிருந்து வெவ்வேறு கலாசாரப் பயில்வுகள்  தொடர்பாக உலகளாவியதோர் உரையாடலை வளர்க்கும் வகையில் ஒன்றிணைக்கப்படுகிறது. எழுத்தாளரான அனுஷ்கா இராஜேந்திரன் கலைசார் நெறியாளரான நட்டாஷா கின்வாலவுடன் இணைந்து தெரிவுதேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு பணிக்கப்பட்ட கலைப்படைப்புக்க ளுடன் (commissioned works), நீண்டகாலக் கலைத்திட்டங்கள் ஆகியனவற்றின் நிலை மாற்றச் செயற்பாடாக ஒன்றிணைக்கப்படுகின்ற அவை கூட்டிணைவைத் தழுவிக்கொள்கின்ற, வாழிடங்களில் அதிகரிக்கின்ற குறுகிய மனபான்மை கொண்ட நடத்தைகளை மறுக்கின்ற ,  அதற்குப் பதிலாக ஒலிசார் அலைவரிசைகளைத் தொடர்புற வைத்தல், நேர்ச் செயற்பாடுகள் (live acts)  மற்றும் வாசிப்பின் வெளிகள்  என்பனவற்றை  ஆரம்பக் கருவிகளாக்கி  அவற்றினூடாக படைப்பாக்கப் படிமுறையின் அசைவியக்கத்தைத் தக்கவைப்பதாகவும், வாழ்க்கைவரலாற்றுக் காலத்தையும், கேட்டலில் ஈடுபட்டிருத்தல் மற்றும் புலம்பெயர் உரித்துணர்வையும் நீடிக்கச்செய்கின்ற இன்றியமையாத கருவிகளாகின்றன

மொழியியல் உடல்கள் புவியியல் எல்லைகள்  கடந்து, பல நாவுகள் மற்றும்  நினைவுத் துண்டங்களது புலங்களால் ஆன சமூக உலகங்களை வடிவமைக்கின்ற முறைமைகளை இன்னும் நாங்கள் பெரும்பாலும்  கருத்திற் கொள்ளவதில்லை. அசையுந்தன்மையும், அசையாத்தன்மையும் பூகோள இருத்தலின் பொது விதிமுறையாக இருப்பதால், வற்புறுத்தப்பட்ட அசைவியக்கத்தின் வரலாற்று வழுக்களை மனதிலிருத்திக் கொள்ளுமாறு நாங்கள் தங்களைக் கேட்கிறோம். இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார தடைகளைத் தாண்டிய கலகத்தனமான அசைவியக்கமானது   வாழ்க்கை சக்திகளை ஒன்றிணைக்கும் உயிரியக்கமுடையதாக்கப்பட்ட (animated)  ஓரம்சமாக நாம் கருத முடியுமா? அடிப்படையில் மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட கண்டத்தட்டுக்களது நகர்வு, நாடோடி இனங்களில் இருந்து நீரோட்டக் காற்று அழுத்தங்கள் வரையான பயண ஓட்டங்களால் உலகம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதுடன் உருவற்ற அவ்வாறான மொழிகளை செவிமடுப்பதுகூட பாரிய முரண்களுக்கு எதிராகத் தக்கவைக்கப்பட்ட பன்மைத்துவ ஓட்டங்களைத் தழுவிக்கொள்கின்ற புலம்பெயர் எதிர்காலங்களுக்கு இட்டுச்செல்லுமா? 


சமூக அந்நியமாதல், ஆயுதமயமாக்கப்பட்டமொழி என்பனவற்றின் பெருக்கம் வாழ்வை நோக்கியதான பேரகரமுதலி ஒன்றிற்கான பசியுடன் எம்மை விட்டுச்செல்கின்ன. 'மொழியின் எதிர்காலத்தில் நீங்களும் பங்குகொள்பவர்கள் ஆகின்றீர்கள்' எனக் கவிஞரும் நாவலாசிரியருமான  ஓசன்வு யொங்க் குறிப்பிடுகின்றார். இந்தக் கருத்தமைவு நிர்வகிக்கப்படுகின்ற பாடத்திட்டத்திற்கு அப்பால் புதிய கட்டமைப்புகளை உருக்கொள்கின்ற, சுயநிர்ணய உரிமையின் முகவரான உடலை மீட்டெடுத்துக் கடந்தகால வரன்முறைக் கதையென்ற ஆற்றினுள் நுழைவதற்கான இயலாற்றலை வெட்டித் திறக்கின்றது. வாழ்ந்த லயத்தினுள் எழுதப்பட்ட கதையாடல் உருக்களையும் புலன்களால் சட்டகமாக்கப்பட்ட அத்தாட்சிகளையும் 'மொழி ஒரு புலம் பெயரி' அழைக்கின்றது. அவை உறவு முறிவடைந்த உறவுகளுக்கிடையேயான தொடர்புகளை மீளுருவாக்கும் வடிவங்களாகவும் ஓர் அந்நியமொழியைக் கற்றுக்கொள்ளும் கடினமான உழைப்பார்ந்த செயலாகவும் எல்லை வலயங்களில் வழியும் பாடல் வரிகளாகவும். சமுத்திரத்தைக் கடக்கையில் ஒருவரால் இழக்கப்படுகின்ற தாய்மொழியாகவும் இருப்பவை. கவர்முள் இசைக்கருவியின் பாங்கில் அவ்வாறான சந்திப்புகள் பார்த்திருத்தல், சான்றுபகிர்தல் நிலைகளிலிருந்து வெளிக் கிளம்புகின்றன. அவை ஒன்றிலிருந்து மற்றொன்றை நோக்கி ஓடுகின்ற, ஒன்றில்லாமல் மற்றையதால் பிழைத்திருக்க முடியாத உறவுநிலை நாட்டங்கள் ஆகும்.

Colomboscope Logo white.png
  • Black Facebook Icon
  • Black Instagram Icon
  • Black YouTube Icon
  • Black Vimeo Icon
bottom of page